மீண்டும் வணக்கம்
நீண்ட இடை வேளைக்குப் பிறகு கதவு திறந்திருக்கின்றேன். இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருத்தமெல்லாம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இடையில் ஏற்பட்டது தடங்கல் என நான் கருதவில்லை. சிலருடைய வலைப்பூக்களைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. சிலருடைய வலைப்பூக்களைப் பார்க்கும்போது வயிற்றெரிச்சலாக இருக்கிறது. இவர்களை எல்லாம் யார் தங்களுக்கான வலை தொடங்கச் சொன்னது என்று. சரி வேற வழி அவர்களும் அவர்களைக் காட்டிக் கொள்ள வேறு என்ன வழி. நானும் இந்த வலைப்பூ தொடங்கிய விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. ஏனெனில் நான் இரண்டாவதாகச் சொன்ன பலிக்கு நானும் ஆளாவேன் என்பதை நான் நன்றாக அறிந்ததால்தான். எது எப்படியோ தொடங்கியாகி விட்டது. தொடர்ந்து எழுத வேண்டும். செயல் அதுவே சிறந்த சொல் என்பார் சேகுவேரா. அதை அவர் முதலில் சொல்ல வில்லை இவர்தான் சொன்னார் என சிலருக்கு மல்லுக்கு நிற்கிறார்கள். சரி எதை யார் முதலில் சொன்னார் என்பதைவிட யார் வழியாக நாம் அதை முதலில் தெரிந்து கொண்டோம் என்பதுதானே முக்கியம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திராவிடக் குஞ்சுகள் எல்லாம் அண்ணா சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஆர்எஸ்எஸ் குஞ்சுகள் எல்லாம் திருமூலர் சொன்னார் என்றார்கள். சொன்தெல்லாம் சரிதான் அந்த ஒரே தேவன் யார் என்பதை அண்ணா சொல்லியிருக்க வேண்டாமா? அவன் ராமன்தானே? இது ஆர்எஸ்எஸ் கேள்வி. இந்த மாதிரியான சிக்கல் எல்லாம் வந்து விடக்கூடாது என்தற்காகத்தான் அண்ணா அப்படிச் சொன்னார். அவருக்கு எல்லோருடைய வோட்டும் வேண்டுமே. அவர் எப்படி ஒற்றைக் கடவுளை அடையாளம் காட்ட முடியும். அதிலும் கடவுள் இல்லை என்ற சொல்கின்ற இடத்தில் இருந்து வந்தவர். இல்லை என்றால் வோட்டு கிடைக்காது. இருந்தால் நல்லது என்ற கமல் டயலாக் மாதிரிதான் இதுவும். அதுவா? அதுக்கு ஆமா. இதுவா? இதுக்கு ஆமா. இல்லையா? இல்லைக்கும் ஆமாம்தான் ஓட்டு வாங்குவதில் திறன் இருந்ததால்தானே திராவிடர் கழகத்தில் இருந்து, திராவிடர்களை முன்னேற்ற கழகம் தொடங்கினார். அட இப்படிக்கூட எங்கோ தொடங்கி ஒருமாதிரி அரசியல் எழுதலாம் போல இருக்கே. அதைச் செய்ய யாரும் முன்வராத சூழ்நிலையில நாமலாவது அதைச் செய்யலாமே. அதோட சமீபத்துல வினை செய் வினை என்ற தலைப்பிலான வலைப்பூ ஒன்றைப் பார்த்தேன் அதற்கு எப்படி link கொடுப்பது என்பதை எல்லாம் இன்னும் கற்றுக் கொள்ள வில்லை. நீங்களாகவே http://www.ikindhu.blogspot.com/ என்று டைப் செய்து பிரதியின் நிறம் என்றொரு கட்டுரை இருக்கிறது. (அது ஒன்று தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். படித்துப்பாருங்கள். எனக்கப் பிடித்திருந்தது. அட அதுவாகவே லிங்க் ஆகும் போல தோணுதே பரவாயில்லை.
Comments