மீண்டும் வணக்கம்
நீண்ட இடை வேளைக்குப் பிறகு கதவு திறந்திருக்கின்றேன். இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருத்தமெல்லாம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இடையில் ஏற்பட்டது தடங்கல் என நான் கருதவில்லை. சிலருடைய வலைப்பூக்களைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. சிலருடைய வலைப்பூக்களைப் பார்க்கும்போது வயிற்றெரிச்சலாக இருக்கிறது. இவர்களை எல்லாம் யார் தங்களுக்கான வலை தொடங்கச் சொன்னது என்று. சரி வேற வழி அவர்களும் அவர்களைக் காட்டிக் கொள்ள வேறு என்ன வழி. நானும் இந்த வலைப்பூ தொடங்கிய விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. ஏனெனில் நான் இரண்டாவதாகச் சொன்ன பலிக்கு நானும் ஆளாவேன் என்பதை நான் நன்றாக அறிந்ததால்தான். எது எப்படியோ தொடங்கியாகி விட்டது. தொடர்ந்து எழுத வேண்டும். செயல் அதுவே சிறந்த சொல் என்பார் சேகுவேரா. அதை அவர் முதலில் சொல்ல வில்லை இவர்தான் சொன்னார் என சிலருக்கு மல்லுக்கு நிற்கிறார்கள். சரி எதை யார் முதலில் சொன்னார் என்பதைவிட யார் வழியாக நாம் அதை முதலில் தெரிந்து கொண்டோம் என்பதுதானே முக்கியம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திராவிடக் குஞ்சுகள் எல்லாம் அண்ணா சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஆர்எஸ்எஸ் குஞ்சுகள் எல்லாம் திருமூலர்...